வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே அல்லாஹ்விடம் அவனுடைய பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு தடுக்கப்பட்டவை. அதுவே நிலையான மார்க்கம். எனவே, அந்த மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்களுடன் எல்லா முறைகளிலும் பேரிடுவதுபோல் நீங்களும் அவர்களுடன் எல்லா முறைகளிலும் போரிடுங்கள். பயபக்தியுடையோருடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அந்நஸீவு – மாற்றுதல் – நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது இதன் மூலம் இறைமறுப்பாளர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனெனில், அல்லாஹ் தடுத்ததின் எண்ணிக்கையை பூர்த்தியாக்குவதற்காகவும், அல்லாஹ் தடுத்ததை விட்டுவிடுவதற்காகவும், ஓர் ஆண்டில் அதை ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றோர் ஆண்டில் அதை தடுத்துக் கொள்கின்றனர். இன்னும் இறைமறுப்பாளர் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி நடத்தமாட்டான்.
அல்குர்ஆன் 9:36-37


Recent Comments