ஹிஜ்ரி நாட்காட்டி

இன்றைய கிழமை

Wednesday

அறிவிப்புகள்

3000 Years Hijri-Gregorian Calendar and Converter

 

September 2010
S M T W T F S
« Aug    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Recent Comments

Assalamu alaikum vrvb dear brothers of hijri commi...
Asslamualikkum.. Masha Allah May Allah showers Hi...
Assalamu Alaikkum http://www.softpedia.com/get/Of...
Assalamuaalikaum wrwb, Very eager to use this ...
இவ்வகை presentation-னுடன் ...
அஸ்ஸலாமு அலைக்கும...
Mr keelparvai, Realy you told true.ella kadai(iya...
Assalamu alaikum this site is very useful to musil...
انا من الجزائر احببت موقعكم...
சலாம் அலைக்கும் சக...

About

அன்பான சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்

அல்லாஹ்வின் கிருபையால்   நாம் செய்யாததை பிறருக்கு சொல்லக் கூடாது என்ற கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்   அல்லாஹ் குர்ஆனில் கூறும் சந்திர காலண்டர் அடிப்படையை மக்களுக்கு இயன்றவரை பிரச்சாரம் செய்து வருகிறது இந்திய ஹிஜ்ரா கமிட்டி.

நாம்  எதை செய்கிறோமோ அதை தான் சொல்லவேண்டும் என்ற இறை தத்துவத்திற்கு ஏற்ப அல்லாஹ் திருமறையில் கூறியுள்ள கணக்கின் அடிப்படையில் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை செய்து வர மக்களுக்கு உதவி செய்து வருகிறது ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா.   சரியான நாளில் பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சக்திக்கு உட்பட்டு ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா  பல இடங்களில் செய்து வருகிறது.   அல்லாஹ்வின் மார்க்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தவிர  வேறு  எந்த விதமான உள்நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.    

நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா?நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?” (அல்-குர்ஆன் 2:44)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 61:2-3)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ் (ரலி) அறிவித்தார்கள். (ஆதாரம் : புகாரி)

இந்த ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா ஒரு ஆர்ஹனைசேஷனோ, டிரஸ்டோ அல்லது சொசைஸ்டியோ அல்ல.  இவை எல்லாம் நிரந்தர இயக்கமாக சமுதாயத்தில் செயல்படக் கூடியவை.   நமது ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா ஒரு தலைப்பின் கீழ் பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து சரியானதை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கும் ஒரு குழு தான்.   இது தற்காலிகமானதே!

இந்த ஹிஜ்ரா கமிட்டி பொது மக்களிடம் வசூல் செய்து நடத்தப்படும் ஒரு அமைப்போ கமிட்டியோ அல்லது ஜமாஅத்தோ  அல்ல என்பதை நினைவில் வைக்கவும்.  நாம் இஸ்லாத்தின் கொள்கையை பிரச்சாரம் செய்யும் போது அந்த கருத்தை ஏற்றவர்கள் அவர்களுடைய சொந்த பொருளாதராத்தில் சத்தியத்தை மக்களுக்கு சொல்லவேண்டும் என்ற கொள்கையை கொண்ட ஒரு கமிட்டிதான் இது என்பதையும் தங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

உலக இலாபங்களுக்காக இந்த கமிட்டி அமைக்கப்படவில்லை.    இன்னும சொல்லப்போனால்   குறிப்பாக அல்லாஹ்வின் சந்திர காலண்டரை நடைமுறைபடுத்தும் விஷயத்திற்காக மட்டும் ஆய்வு செய்யும் ஒரு கமிட்டிதான் இது.   இந்த கமிட்டி எவருடைய சுயலாபத்திற்காகவும் ஆரம்பிக்கபடவில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறோம்.   மனித சமுதாயம் அல்லாஹ்வுடைய நாட்காட்டியை பின்பற்ற ஆரம்பித்து விட்டால் இந்த கமிட்டி கலைக்கப்படும் என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இந்த கமிட்டி பிற ஜமாஅத்துகளை அமைப்புகளை மற்றும் இயக்கங்களை திட்டவோ,  கேவலப்படுத்தவோ செய்யாது.    ஆய்வுபணிகளை மிகச்சரியாக மேற்கொண்டு அவற்றை அழகிய முறையில், நளினமான வார்த்தையில் எடுத்துரைக்கும் ஒரு கமிட்டி. ஆய்வில் தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அதை பரீசீலித்து அது சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உடனடியாக முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு கமிட்டிதான் இது.

மேலும் உலகில் பிறை நிலைபாட்டில் எந்த வகையில் எல்லாம் தமிழ் பேசும் மக்கள் ஆய்வு செய்தார்கள், மக்களிடம் அதை பிரச்சாரம் செய்தார்கள், என்பதை எல்லாம் இதன் மூலம் உலகில் வாழும் தமிழ்பேசும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கிலும் இத்தளம் ஹிஜ்ரா கமிட்டியின் கருத்துக்கு உடன்பட்டோர்கள் எதிர்ப்பாளர்கள் அனைவரது கருத்துதையும் இத்தளத்தில் பதிந்து உங்கள் சிந்தனைக்கு கேள்விகள் எழுப்படும்.

எங்கள் ஆய்வுகளை பரீசீலனை செய்து சரியான விஷயமாக இருந்தால் இதை பின்பற்றினால் போதும் என ஹிஜ்ரா கமிட்டி உங்கள அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.   யார் மீதும்
இந்தியா ஹிஜ்ரா கமிட்டி இந்த கொள்கையை திணிக்காது.    சொல்லு்ம் கொள்கையில் இந்திய ஹிஜ்ரா கமிட்டி கடைசி வரை உறுதியாக நிற்கும்.   எங்கள் உறுதிக்காகவும்,  நல்ல முறையில் சத்தியத்தை தெளிவுபடுத்தும் ஞானத்தை எங்களுக்கும் உங்களுக்கும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா

இப்படிக்கு

நிர்வாகம்

இந்திய ஹிஜ்ரா கமிட்டி.

Share and Enjoy:
  • Print
  • Google Bookmarks
  • PDF
  • email
  • Add to favorites
  • Facebook
  • LinkedIn
  • Twitter